Monday, 21 October 2019

ஸ்ரீ ஞானசுந்தரி அம்பாள் உடனாகிய தென் 
திருக்காளத்தீஸ்வரர், ஏழு செம்பொன், விழுப்புரம் மாவட்டம். 

விழுப்புரம் - திருவண்ணாமலை பெருவழியில் உள்ள சூரப்பட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் எழுச்செம்பொன் ஊர் அமைந்துள்ளது. எஷமூர் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டு உள்ளது. ஏழு செப்புக்குடங்கள் நிறைய பொற்காசுகள் இவ்வூர் கோயில் சுரங்களில் போட்டு  புதைக்கப்பட்டு உள்ளதால், இவ்வூருக்கு  ஏழு செம்பொன் என்று பெயர் ஏற்பட்டது என்று ஊர் மக்கள் நம்புகின்றனர். 

ஆனால் கல்வெட்டுகளில் இவ்வூர் பெயர் ஏழிசைமோகன் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடலூரை தலைநகரமாக கொண்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் வட்டத்துப்பகுதிகளை காடவராயர் என்ற பட்டத்துடன் பல சிற்றரசர்கள் சோழர் காலத்தில் ஆட்சிப்புரிந்தனர். ஏழிசைமோகன் குலோத்துங்க காடவராயன், ஏழிசைமோகனானான ஜனநாதகச்சிராயன், ஏழிசைமோகன் மணவாளப்பெருமாள், கூடல் ஏழிசைமோகன், ஆளப்பிறந்தான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வம்சத்தில் தோன்றியவனும் சோழமன்னன் மூன்றாம் இராசராசனை எதிர்த்து சேந்தமங்கலத்தை தலைநகராக இக் கொண்டு சுதந்திரமான மன்னனாகி தொண்டை மண்டலம் முழுவதையும் வென்று, ஆட்சி செய்த கோப்பெரும்சிங்கன் என்பவரே வலிமை மிக்க மன்னரானார். இவர் 1242 முதல் 1279 வரை ஆட்சி செய்தார். இவருடைய பட்டப்பெயர்களில் முக்கியமானது ஏழிசைமோகன் அழகியசீயான் என்பது ஆகும். இவருடைய பெயரால் ஏழிசைமோகன ஊர் ஏற்பட்டு காலபோக்கில் மழுவி எழுசெம்பொன் என மறுவிவிட்டது.

இவ்வூர் சிவன்கோயிலில் மூன்று கல்வெட்டுகளும், பெருமாள்கோயிலில் ஏழு கல்வெட்டுகளும் எழுதப்பெற்றுள்ளன. இவற்றில் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் மூன்று. விசயநகர மன்னர் காலத்தவை நான்கு. பெயர் குறிப்பிடாத பிற்கால கல்வெட்டுகள் மூன்று ஆகும். இவற்றில் மிகப்பழமையான கல்வெட்டு மூன்றாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடையது. இவர் கி.பி 1303 முதல் 1322 வரை ஆட்சிபுரிந்தார். இவருடைய 13வது ஆண்டுக் கல்வெட்டு (கி.பி. 1316 ) இக்கோயில்களில் இருப்பதால் இவருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோயில்கள் கட்டப்பெற்றன எனலாம். 


கி. பி 1340 மாற வர்மன் விக்கிரபாண்டியன், சதுர்வேதி மங்களத்தை சுவாமிக்கு தானமாக கொடுத்து உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டி வழிபாடு செய்து வந்தார். இத்திருத்தலத்திற்கு, ஆலய பணி செய்வோருக்கு உடல்நலம் ஆரோக்கியம் தரும் என்பது இறைவாக்கு. இத்திருத்தலத்திற்கு, திங்கள் தோறும், ஐந்து வாரம், ஆலய தரிசனம் செய்வோருக்கு ,உடல்நலம் குழந்தை பாக்கியம், கடன் நிவர்த்தி, திருமண தடை நீங்க அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது கல்வெட்டில் உள்ள இறைவாக்கு.

இத்தகைய சிறப்பு மிக்க கோயில் கி.பி. 1463 ஒரிசா நாட்டு மன்னன் குமாரஹம் வீரர் என்பவர் இப்பகுதி மீது படையெடுத்து பொழுது, அழிக்கப்பட்டது. இப்படையெடுப்பை ஒட்டியன்கலகம் என்று கல்வெட்டு கூறுகிறது. ஆனால் விரைவிலேயே விசயநகர மன்னர் மில்லகார்ஜூனராயர் என்பவரின் தளபதி சாளுவ நரசிங்கர் என்பவர் 1464ல் ஒரிசா மன்னரை விரட்டிவிட்டு இப்பகுதிகளை மீட்டார். கிருஷ்ணதேவரையர் கி.பி 1518ல் நாவிலங்காதாள்பட்டு என்ற ஊரை  சிவன்கோயிலுக்கு கொடுத்தார். 

இவ்வாறு கோப்பெருஞ்சிங்கன்  காலத்தில் தோன்றிய ஊரில் பாண்டியர் காலத்தில் கட்டப்பெற்று, ஒரிசா மன்னனால் அழிக்கப்பட்டு, விசயநகரமன்னனால் மீண்டும் புதுப்பித்துக்கட்டப்பட்ட திருக்கோயில் பல வருடங்களாக  சரியான வழிபாடின்றி, இடிந்த நிலையில், தற்பொழுது திருப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 


விண்ணப்பம்/ வேண்டுகோள்


வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் பாடிப் புகழப்பட்ட திருக்கோயில்கள், பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள் ஆகிய பல்வேறு புனிதமான திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றினை திருப்பணி செய்து புதுப்பிக்கும் பணி இன்றியமையாததாகும். செல்வவளமோடு இருக்கும் பல திருக்கோயில் சென்று காணிக்கை செலுத்தும் நாம், வாழ்வில் சேதம் அடைந்த ஒரு திருக்கோயில் ஆவது திருப்பணி செய்வது நம் பிறவி கடமையாகும் !

வாருங்கள்! ஒன்று கூடி! மீண்டும் எழுச்செம்பொன் திருக்கோயிலையை, பழைய சிறப்பான நிலைமைக்கு கொண்டு வருவோம்!! 

வணங்கி, வரவேற்கிறோம்! அடியார்களின் உதவிகளை நாடி....

தொடர்புக்கு - 'ஏழுசெம்பொன்னூரார்' சிவ ரமேஷ் அவர்கள் - +91 7708463779

திருப்பணி உதவிக்கு - வங்கி விவரம் ↡↡↡


A/c no; 4386101006532 
Canara Bank
Branch - ATHANOOR
IFSC Code: CNRB0004386
MICR Code: 605015027
Branch Code: 004386
Trust Name - Then Thirukkalatheeswarar A V A Trust, Elusembon, Vikravandi Taluk, Villupuram 605203


Google Location - https://goo.gl/maps/eUmnBvq85EH9eaAP6  

THEN THIRU KALLATHEESWARAR TEMPLE, 
Anniyur Road, 
Ezhusempon, 
Tamil Nadu 605203


Sree Gnanasundari Ambal Samedha Thenthirukalatheeswarar Temple, Ezhu sempon, Viluppuram district, Tamilnadu
(Translated into English by: Santhipriya of https://santhipriya.com/)

Ezhu Sempon (meaning seven copper metal) is a small village located six Kilometres away from Soorapatti, another village lies in the highway between Viluppuram to Tiruvannamalai. Ezhu sembon is also known as Eshamur. It is believed that since seven copper vessels filled with gold coins have been buried below this temple situated in this area, the village was earlier called Ezhu Sempon.

The inscriptions found in this village suggest that this place has been called ‘Ezhussaimohan’. During the reign of  Chola dynasty small villages like Cuddalore, Virudrachalam, Chidambaram, Panrutti, Viluppuram etc  were ruled by few Princes named ‘Ezhussaimohan’, ‘Kulothunga Kadavarayan’, ‘Jananathagachchiraaya Ezhussaimohan’, ‘Manavaalapperumal Ezhussaimohan’, ‘Koodal Ezhussaimohan’, ‘Aalapiranthaan’ etc.  Cuddalore was the capital to all those villages.  One of the powerful Kings named Koperumsingham who belonged to Chola dynasty, took over the reins of this region naming Senthamangalam as his capital after driving away Rajaraja Chola-III to conquer the entire Kondai Mandala (mandala means zones or region consisting of few cities). Since King Koperumsingham who ruled the conquered areas from 1242 till 1279 and held the title ‘Ezhuessaimohan Azhagiyaseemaan’, the village came to be called ‘Ezhussaimohan’ which over the years gradually got alternated as ‘Ezhu Sempon’ village.     

While three inscriptions are found in Lord Shiva’s temple in this village another seven inscriptions are found in Perumal temple out of which four inscriptions pertained to the period of Vijayanagar rulers and rest three pertains to the period of Pandya rulers. The oldest amongst the inscription relates to the period of ‘King Maravarma Sundara Pandian-III’ who ruled from the year 1303 AD to 1322 AD. Since one of the inscriptions found in this temple relates to the period 1316 AD, it is presumed that these temples may have been built during his rule.

During the regime of King Maravarma Vikra Pandya he prayed for keeping good health and donated ‘Chathurvedi Mangalam’ (name of an adjacent a small village) in the name of the temple deity. Hence the belief that those who offer some kind of services to this temple will be rewarded by the Lord with good health. As per the contents in the inscriptions if one visit this temple continuously on five Mondays and offer worship, it is believed that the childless couple beget children, hurdles in marriage proposals vanish and the one who offer prayer is relieved of their debts. 

Such a great temple was demolished by a King of Orissa namely ‘Kumaraham Veera’ when he invaded this place in the year 1463 AD. The inscription mentions the invasion as ‘Ottiyankalagam’ (meaning Oriyan revolt).  However the Oriyan King was driven away in the year 1464 AD by one of the Army generals of the then Vijayanagar ruler ‘Millakaarjuna Raayaa’ named General ‘Chaluva Narasimha’. In the year 1518 AD King ‘Krishnadevaraaya’ donated a village called ‘Navilangathaalpattu’ to this Shiva Temple.      

The glorious temple of Lord Shiva thus established during the reign of King Koperumchingan, destroyed by the Oriyan King and resurrected by the rulers of Vijayanagar today remains neglected and in depilated condition for several centuries. Now efforts have been taken by few devotees to renovate this temple.

Appeal 

Several glorious temples with historic background, greatness of which were sung by Nayanmar and Azhwars and many sacred temples are found in the interior villages in Tamilnadu.  Some of them remain in dilapidated and in ruined condition and uncared by public because they are unaware of the spiritual importance and greatness of the deities enshrined there. 

It is imperative that those temples need to be restored and put to worship for public as many of them have curative powers in relieving ones’ Doshas and sins and offer relief of many kind in ones’ life. One of the paramount duties of each individual born on earth is to offer service to the divine cause in one way or the other. It is therefore appealed to the devotees to join together by contributing funds within their might for the renovation and restoration of such past glorious temples. In this direction the Ezhu Sempon temple has now been taken up for renovation and restoration by the villagers. The devotees are requested to kindly contribute for this cause by sending money directly to the address and details given below:

Contact: 'Ezhu Sempon' Siva Ramesh
Telephone: +91 7708463779

Google Location - https://goo.gl/maps/eUmnBvq85EH9eaAP6 

Bank Details:



A/c no; 4386101006532 
Canara Bank
Branch - ATHANOOR
IFSC Code: CNRB0004386
MICR Code: 605015027
Branch Code: 004386

Trust Name - Then Thirukkalatheeswarar A V A Trust, Elusembon, Vikravandi Taluk, Villupuram 605203

படங்கள் - நன்றி - சிவனுக்கு இனியவன் பாகம் இரண்டு (FB) - https://m.facebook.com/story.php?story_fbid=200980427589272&id=100030319485274 












 திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது  Temple renovation is under progress. 












Reference

1)  https://kathirnews.com/2019/10/02/is-this-temple-visible-in-the-eyes-of-the-hindu-religious-center/

2)https://m.dailyhunt.in/news/india/tamil/kathir+news-epaper-kathir/inthu+samaya+aranilaiyathurai+kannil+tenbaduma+intha+kovil-newsid-139745328

3) https://m.facebook.com/story.php?story_fbid=200980427589272&id=100030319485274